ரொம்ப நோஞ்சானாக இருக்கோம்னு கவலையா!! கொள்ளு சாப்பிட்டு பாருங்க !!

குதிரைக்குத் தீவனமாக பயன்படும் கொள்ளுப்பயிறில் மனிதர்களுக்குத் தேவையான நிறைய நிறைய சத்துகள் நிரம்பியுள்ளன. சித்தா, ஆயுர்வேதத்தில் கொள்ளு மருந்துப் பொருளாகவும் பயன்பட்டு வருகிறது.


முளை கட்டிய கொள்ளுப்பயிறில் உயிர்ச்சத்துக்களும் இரும்பு, பொட்டாசியம் போன்ற தனிமங்களும் நிரம்பியிருப்பதால் குழந்தைகள் முதல் பெரியோர் வரையிலும் அனைவருக்கும் ஏற்றது.

* கொழுப்பைக் கரைத்து உடலை மெலிவாக்கும் ஆற்றல் கொள்ளுக்கு உண்டு என்பதால் உடல் பருமன், தொந்தி உள்ளவர்களுக்கு ஏற்றது.

* நோஞ்சானாக இருப்பவர்கள் தொடர்ந்து கொள்ளு சாப்பிட்டு வந்தால் குதிரையைப் போன்ற வலுவான எலும்பு, தசை பெறமுடியும்.

* கொள்ளு ரசம் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மைகளை வெளியேறுகிறது. வயிற்றுப்பொருமல், வயிற்று வலியையும் தீர்க்கிறது.

* கொள்ளுவை வேகவைத்த நீர் குடிக்கும்போது நெஞ்சு சளி, ஆஸ்துமா, காய்ச்சல் போன்ற பிரச்னைகளின் தீவிரம் குறையும்.

உடல் வளர்ச்சிக்கான திசுக்களை வளர வைப்பதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் கொள்ளு அதிகம் செயலாற்றுகிறது.