என்றென்றும் இளமையாய் இருக்க ஆசையா !! இதோ முதுமையைத் தடுக்கும் தேங்காய்!!

தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட ஒன்று தேங்காய். விழா, பண்டிகை, சடங்கு போன்ற அத்தனை விசேஷங்களிலும் தேங்காய் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. தேங்காயை மங்கள சின்னமாக கருதுகிறார்கள் மக்கள்.


தேங்காயில் மாவுச்சத்து, புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்களும் வைட்டமின் சி, நார்ச்சத்து போன்ற உடல் இயக்கத்துக்கு அவசியமான ஏராளமான சத்துக்களும் இருக்கின்றன.

• தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் போன்றவை வைரஸ் மற்றும் பாக்டீரியா நுண்கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டவை.

• அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்ணுக்கு தேங்காய்ப்பால் மிகவும் உகந்தது. 

• உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் நிரம்பியிருப்பதால், உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு தேங்காய் உதவுகிறது.

• தேங்காயில் இருக்கும் வைட்டமின் இ முதுமையைத் தடுப்பதற்கு உதவுகிறது. மேலும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டையும் தேங்காய் ஊக்குவிக்கிறது.

தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு ஈடாக இளநீரில் இருக்கும் புரதச்சத்தை சொல்ல முடியும். அதனால் சித்த மருத்துவத்தில் தேங்காய்க்கு தனியிடம் உண்டு.