கண் கூர்மையடைய வேண்டுமா… அப்போ அடிக்கடி காலிஃப்ளவர் சாப்டா பழகிக்கோங்க ..

சிறியவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களில் ஒன்று காலிஃப்ளவர். பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் காலிஃப்ளவரில் நிரம்பியுள்ளன.


அதேநேரம் காலிஃப்ளவரில் இருக்கும் புழுக்களால் நரம்புகளுக்கு பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் கொதிக்கும் நீரில் காலிஃப்ளவரை போட்டு எடுத்தபிறகுதான் பயன்படுத்தவேண்டும்.

• வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் நிரம்பியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

• கரோட்டின் சத்து காலிஃப்ளவரில் அதிகம் இருப்பதால், கண் கூர்மைக்கும் கண் அழுத்த பிரச்னைகளுக்கும் நல்லது.

• உடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றி சிறுநீரகத்தை சீராக செயல்படவைக்கும் தன்மை காலிஃப்ளவருக்கு உண்டு.

• மன அழுத்தம், படபடப்பு போன்றவற்றை கட்டுப்படுத்தி, மனதுக்கு நிம்மதி தரும் தன்மையும் காலிஃப்ளவருக்கு உண்டு.

காலிஃப்ளவரை எண்ணெய்யில் பொறித்து சாப்பிடும்போது முழுமையான சத்துக்கள் கிடைக்காது என்பதால் அவித்து பயன்படுத்த வேண்டும்.