நதி நீர் இணைப்பு தேவைதானா.? காங்கிரஸ் நிலைப்பாடு இதுதானா ?

இந்தியா முழுவதும் நதிகளை இணைக்கப் போகிறோம் என்று பா.ஜ.க. பொங்கிவரும் வேளையில், அது சாத்தியம் இல்லை, தேவையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் ஆதாரபூர்வமாகப் பேசியிருக்கிறார்.


ஆனால், நதிநீர் இணைப்பு குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசிய உரையை யாரும் கவனிக்கவில்லை என்பதுதான் சோகம். ஏமாற்றும் வகையில் பேசுவதை மட்டுமே கவனிக்கும் மக்கள், இதற்கும் காது கொடுத்தால் நல்லது.

கடலுக்கு நதிநீர் செல்லாவிட்டால் இயற்கைச் சமநிலையில் ஏற்படும் சீர்கேடு, நதிநீர் இணைப்பால் இடையில் உள்ள நிலப்பரப்பில் வாழும் மக்கள் மற்றும் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவை குறித்துப் பேசியுள்ளார். இதை நம் தமிழக எம்.பிக்கள் எதிர்த்துள்ளனர். காங்கிரஸ், பாஜக மற்றும் பல்வேறு மாநிலக் கட்சிகளும் நதிநீர் இணைப்பு என்னும் மாயையை ஆதரிக்கின்றன. கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு தெரியவில்லை.

பொதுப்புத்தியில் நன்னோக்குத் திட்டமாகப் பதியப்பட்டுள்ள நதிநீர் இணைப்புக்கு எதிராகப் பேசிய ஜெய்ராம் பாராட்டுக்குரியவர். நதி நீர் இணைப்பு என்பது மாய நதி என்பது புரியாமல்தான் எல்லோரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.