உதயநிதி பிறந்தநாளுக்கு இப்படி ஒரு கொண்டாட்டம் தேவையா..? டென்ஷன் ஆகும் உடன்பிறப்புகள், நிர்வாகிகள்.

கருணாநிதி பிறந்த நாள் என்றால், தமிழகத்தில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் நேரில் பொன்னாடை போர்த்தி வாழ்த்துவது தி.மு.க. வழக்கம். அந்த வகையில், உதயநிதியின் பிறந்த நாளுக்காக தமிழகம் முழுவதுமுள்ள நிர்வாகிகள் வந்துசேர வேண்டும் என்று கூறப்பட்ட அழைப்புதான் அத்தனை நிர்வாகிகளையும் அதிர வைத்துள்ளது.


இந்த கொரோனா காலத்தில் யாரும் என்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அறிவிப்பார் என்று எதிர்பார்த்தால், எல்லோரையும் குறித்துக் கொள்ளுங்கள் என்று ஆட்களைப் போட்டு வருபவர்களின் லிஸ்ட்களை எடுத்துவருகிறது உதயநிதி டீம்.

அது மட்டுமின்றி, வெவ்வேறு பத்திரிகைகளில் பாராட்டி விளம்பரம் கொடுங்கள், சுவர் விளம்பரம் எழுதுங்கள் என்றும் மிரட்டாத குறையாக சொல்லி அனுப்புகிறார்களாம். ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்தால் எல்லோரும் உதயநிதி வீட்டு வாசலில்தான் நிற்க வேண்டுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் நிர்வாகிகள்.