புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பெண்கள் ஏன் உயிராக மதித்தார்கள் என்று தெரியுமா?

தாய்க்கு மகனாக, தங்கைக்கு அண்ணனாக, துன்பப்படும் ஏழைப் பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் சக்தியாக புரட்சித்தலைவர் இருந்தார்.


பொதுக்கூட்டங்களுக்கு பெருந்திரளாக பெண்கள் திரண்டு வந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான். சிகரெட் பிடிக்காமல், மது குடிக்காமல் நாயகனின் இலக்கணத்தோடு சினிமாவிலும் நிஜ வாழ்விலும் இயல்பாக இருந்த காரணத்தாலே பெண்களின் மனதில் இடம் பிடித்தார்.

எம்.ஜி.ஆர். பிரசார மேடைக்கு முன்பு பெண்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டது. என்னை வாழவைத்த தெய்வங்களாகிய தாய்மார்களே என்றுதான் பேசத் தொடங்குவார். கணவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் பெண்கள் எம்.ஜி.ஆருக்குத்தான் வாக்களிப்பார்கள்.

இரவுக்காட்சி பார்த்துவிட்டு திரும்பும் பெண்கள் பாதுகாப்புடன் வீடு திரும்பவேண்டும் என்ற நோக்கத்துடன் மகளிர் காவல் படை உருவாக்கினார். 

ஆண்களிடம் ஒரு ரகசியம் பேச வேண்டும் என்று முதலில் பெண்களை அனுப்பிவிட்டு, அதன்பிறகு ஆண்களை கலையச்சொல்லும் அளவுக்கு பெண்கள் பாதுகாப்பில் ஆர்வத்துடன் இருந்தார்.

சத்துணவுத் திட்டம் கொண்டுவந்த நேரத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், முதிர்கன்னிகளுக்கு சத்துணவு டீச்சர், ஆயா வேலைகளில் முன்னுரிமை வழங்கினார். எம்.ஜி.ஆர். கருணையால் ஒரே நாளில் 10 ஆயிரம் பெண்கள் அரசுப் பணியாளர் ஆகும் வாய்ப்பை எம்.ஜி.ஆர். வழங்கினார்.

மாநிலத்தில் உள்ள அனைத்து ஆலய அறங்காவலர் குழுக்களிலும் ஒரு பெண் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று சட்டம். மகளிர் காவல் நிலையங்கள், பெண் காவலர்கள் உடையில் மாற்றம், அதிக பெண் காவலர்கள் நியமனம்.

பெண்கள், சிறுவர்கள் குற்றங்களை விசாரணை செய்வதற்கு பெண் போலீஸ். பெண் வீரத்துக்கு எடுத்துக்காட்டாக பனை மரம் ஏறுவதற்கு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. புகையில்லா அடுப்பு கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தில் எரிவாயுவை பயன்படுத்தும் திட்டம். புகையில்லா அடுப்பு கொண்டுவரும் திட்டத்தில் மத்திய அரசின் இலக்கை மிஞ்சிய சாதனை படைத்தார் புரட்சித்தலைவர்.