வெள்ளைப்பூண்டுக்கும் கொழுப்புக்கும் ஏன் ஆகாது? இந்த செய்தியை படித்து தெரிந்துகொள்ளுங்கள் !!

பூமிக்கு அடியில் முளைக்கும் கிழங்கு போன்ற வெள்ளைப் பூண்டை வெள்ளை வெங்காயம் என்றும் சொல்வார்கள். எத்தனை முறை சொன்னாலும் குறையாத மருத்துவத் தன்மைகள் கொண்டது வெள்ளைப்பூண்டு.


கடுமையான காரமும் எரிப்புத்தன்மையும் கொண்ட வெள்ளைப்பூண்டு அன்றாட சமையலுக்கு மட்டுமின்றி பல்வேறு மருந்துகளுக்காகவும் பயன்படுகிறது. 

• பச்சையாக பூண்டு சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன் உடல் பலமும் உற்சாகமும் உண்டாகும்.

• ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் செயல் திறனை அதிகரிக்கும் தன்மை வெள்ளைப்பூண்டுக்கு உண்டு.

• ரத்தக்குழாயில் கொழுப்பு படியும் தன்மையை குறைக்கும் சக்தி வெள்ளைப்பூண்டுக்கு உண்டு என்பதால் இதயத்துக்கு நல்லது.

• உடலில் தேவையற்ற கொழுப்பு, ஊளைச்சதை, தொப்பை போன்றவற்றை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.

எண்ணெயில் பூண்டு போட்டு காய்ச்சி உடல் வலி, கால் வலி, மூட்டு வலி, நரம்பு வலிக்குத் தடவினால் குணம் கிடைக்கும். காய்ச்சிய பாலில் பூண்டு போட்டு பருக நல்ல தூக்கம் வரும்.