மலை மீது கோயில் ஏன் கட்டினாங்க தெரியுமா?

அர்த்தமுள்ள பல அறிவியல் பின் புலன்களைக் கொண்டே நம் முன்னோர்களால் மலை கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் இடங்களில் மலை கோவில்கள் முதன்மையானவை. மனிதனுக்கு தேவையான மருத்துவங்கள் இயற்கையிலேயே இருக்கின்றன அதில் மலை கோவில்கள் தரும் அற்புத பெறும் பங்கை இங்கே காணலாம்.


சுவாமி ஐயப்பன், பழனி முருகன், திருப்பதி வெங்கடாஜலபதி போன்ற மலைக்கோயில்களுக்கு சென்றுவர ஏராளமான மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஊருக்குள் வைக்காமல் ஒவ்வொரு மலையின் மீதும் ஏன் கோயில்களை கட்டினார்கள் என்பதற்கு ஆரோக்கியமான காரணம் இருக்கிறது.


ஆம். அடிவாரத்தில் இருந்து நடந்து மலையேற வேண்டும் என்பதற்காக, விநாயகர் கோயிலை அடிவாரத்தில் கட்டினர். மலைப்பாதையின் இருபுறமும் வனம் போல திறந்தவெளியாக இருக்கும். அங்குள்ள மூலிகைகள் மீது பட்டு வரும் காற்று மருத்துவகுணம் கொண்டது. மேலும் மலைப்பாதையிலுள்ள ஊற்று, சுனைநீரில் மருத்துவகுணம் நிறைந்திருக்கும். அது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும். மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போது, தசைகள் வலுவடையும். தேவையற்ற கொழுப்பு, சதை கரைந்து போகும். காலுக்கு சிறந்த பயிற்சி ஏற்படும் வியர்வை வெளியேறும். நல்ல பசி உண்டாகும்.


திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற தலங்களில் மலையைச் சுற்றி வந்து வழிபடுவதும் இதற்காகத் தான். கிரிவலம் வரும்போது விளையாட்டாகப் பேசிக் கொண்டு சுற்றக் கூடாது. இறை நினைவுடன் மட்டும் சுற்ற வேண்டும். இதனால் தியானத்திற்கு ஈடாக மனம் ஒருநிலைப்படும். மனம் அடங்கினால் உடலுக்கு நல்லது. இதன் அடிப்படையில் தான் மலையில் கோயில்கள் கட்டப்பட்டன. தினமும் ஒரு முறை மலையேறி இறங்கினால் உடல் ஆரோக்கியத்துக்கு குறையே இருக்காது என்பதைத்தான் நம் முன்னோர்கள் மலை மீது கோயில் கட்டி சொல்லியிருக்கிறார்கள்.


For More NEWS CLICK BELOW LINK

TIMES TAMIL

TIMES TAMIL TWITTER PAGE

TIMES TAMIL FACEBOOK PAGE