உதயநிதி எதற்கு விஷம் குடித்தார் தெரியுமா..? தி.மு.க.வை மிரளவைத்த வளர்மதி

சமீபத்தில் ஒரு பிரசாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, சசிகலாவிடம் எடப்பாடி பழனிசாமி ஆசி பெற்றதை கிண்டல் செய்வதாக நினைத்து ஆபாசமாகப் பேசினார். இதற்கு பதிலடி கொடுப்பது போன்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கடுமையாகப் பேசி கை தட்டல்களை அள்ளினார்.


இன்று வளர்மதி, ‘‘எம்.ஜிஆர் அன்றைக்கே கருணாநிதியை தீய சக்தி என்று சொன்னார்.இந்தத் தேர்தலோடு திமுகவின் கதை முடிக்கப்பட வேண்டும். நம்மைப் பார்த்து ஊழலாட்சி என்று ஸ்டாலின் குடும்பம் வீதி வீதியாக சென்று சொல்லிக் கொண்டிருக்கிறது. ஊழலாட்சி என்று சொல்லக் கூடிய அந்த கூட்டமெல்லாம் உத்தமர் காந்தி வீட்டுப் பேரன்களா? கருணாநிதி வீட்டுப் பிள்ளைகள்தானே... ஊழல் செய்தே பழக்கப்பட்டவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். எங்களைப் பார்த்து ஊழல் என்பது கேலியாக இருக்கிறது.

சில நாட்களாக ஸ்டாலின் கூட்டம் அண்ணன் எடப்பாடியாரைப் பற்றி மிகக் கேவலமாக அருவெறுப்பாக பேசித் திரிகிறார்கள். நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். அண்ணன் எடப்பாடியாரைப் பற்றி தாறுமாறாக பேசினால் நாங்களும் திருப்பிப் பேசுவோம் நாங்கள் பேசினால் நீங்கள் தாங்க மாட்டீர்கள்.

உங்களைப் பற்றித் தெரியாதா.... எடப்பாடியாரைப் பற்றி பேசும் உதயநிதியே...நீ விஷம் குடித்தாயே ஏன் குடித்தாய்? யாருக்காக குடித்தாய்? சொல்லட்டுமா...கதை நாறிப் போய்விடும். நாங்கள் பேசினால் நாடு சிரித்துப் போய்விடும். தங்கத்தின் தங்கமாக விளங்கும் எங்கள் அண்ணன் எடப்பாடியாரைப் பார்த்து பேசினால் நாக்கு அழுகிப் போய்விடும்.

எடப்பாடி தீரன் சின்னமலை என்றால் ஓபிஎஸ் பூலித் தேவன். இந்த இயக்கத்தை இருவரும் வழி நடத்துகிறார்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பொதுத் தேர்தலில் மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுத் தரவேண்டும்...‘‘ என்று பேசினார்.

அதுசரி, உதயநிதி எதற்காக விஷம் குடித்தார் தெரியுமா? இதற்கு பொதுக்குழுவிலேயே பலர் ரகசியமாக பேசிக்கொண்டனர். அதாவது, ‘நடிகை நயன்தாராவை உதயநிதி திருமணம் முடித்துக்கொள்ள ஆசைப்பட்டாராம். தகவல் அறிந்து அவர் குடும்பத்தில் பூகம்பம் வெடித்தது. மனைவியை சமாளிக்க முடியாமலே உதயநிதி விஷம் குடித்த நிலையில் கஷ்டப்பட்டு காப்பாற்ரினார்கள்‘ என்று பேசிக்கொள்கிறார்கள்.

இது நிஜம்தானா என்பதை உதயநிதியும் வளர்மதியும்தான் சொல்ல வேண்டும்.