சோம்பு மென்று சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பெருஞ்சீரகத்தை நாம் சோம்பு என்றும் அழைக்கிறோம். ஹோட்டல் மற்றும் வீடுகளில் சாப்பிட்டு முடித்ததும் சோம்பு எடுத்து வாயில் போடுவது நிறைய பேருக்கு உள்ள பழக்கம்.


·         சாப்பிட்ட உணவை ஜீரணிக்க வைக்கும் சக்தி இதற்கு உண்டு. எனவே எளிதில் ஜீரணமாகாத உணவுகள், அசைவ உணவுகளில் சோம்பு சேர்த்து சமைப்பது தமிழர்கள் பண்பாடு.

·         உணவு குறைபாட்டால் குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுகள் சீற்றத்தையும், குடல் சுவர், குடல் புண்களை குணப்படுத்தும் சக்தியும் சோம்புக்கு உண்டு.

·         சோம்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் நாள்பட்ட இரைப்பு, மூக்கில் நீர் வடிதலுக்கு ஆறுதலாக இருக்கும். சோம்பை தனியாக மென்று சாப்பிட்டால் நன்கு பசியெடுக்கும்.