தேன் ரத்தத்தில் கலந்ததும் என்ன நடக்கும்னு தெரியுமா? நாம் உண்ணும் உணவை முழுதாய் அறிந்துகொள்வோம்!

நாக்கில் பட்டவுடன் உயிர் காக்கும் மருந்தைப் போல் உடனடியாக ரத்தத்தில் கலந்துவிடும் தன்மை கொண்டது தேன். இதன் சுவைக்கு ஈடாக வேறு எதையும் சொல்லமுடியாது.


நரம்புகளைப் பலப்படுத்துவதற்கும் உடலுக்கு உடனடி சக்தி கிடைப்பதற்கும், இழந்த சக்திகளை மீட்பதற்கும் பயன்படும் தேனில் சுமார் எழுபது வகையான சத்துக்கள் நிரம்பியுள்ளன.

• நோயின் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும் சத்துக்கள் தேனில் இருப்பதால் குழந்தைகளுக்கும் நோயாளிகளுக்கும் தேன் மிகவும் நல்லது.

• தினமும் தேன் அருந்திவந்தால் சிவப்பணுக்கள் எண்ணிக்கை பெருகும் என்பதால் ரத்தசோகை பிரச்னையை விரட்டிவிடலாம்.

• சுடுநீரில் தேன் ஊற்றிக் குடித்தால் இருமல், சளி பிரச்னை தீருவதுடன் நிம்மதியான உறக்கமும் வரும்.

• உடல் அழகையும் குரல் இனிமையையும் பாதுகாக்கும் தன்மை தேனுக்கு உண்டு. மேலும் தேவைக்கு அதிகமாக இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் தேனுக்கு உண்டு.

ஒரு கிலோ தேன் எடுப்பதற்கு சுமார் ஐந்து லட்சம் மலர்களுக்கு தேனீக்கள் பயணப்படுகின்றன. தேனை சுடவைத்து சாப்பிட்டால், அத்தனை சத்துக்களும் பயனற்று போய்விடும் என்பதால் தரமான தேன் வாங்கி அப்படியே பயன்படுத்த வேண்டும்.