பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தற்போது என்ன இருக்கிறது தெரியுமா? யாரும் அறிந்திடாத ரகசியம்!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் தற்போது என்ன இருக்கிறது என்று நம்மில் பலருக்கு தெரியாது.


1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகியவற்றை தான் நம்மில் பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால் இடிக்கப்பட்ட பிறகு பாபர் மசூதி இருந்த இடத்தில் என்ன இருக்கிறது என்று யாரும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

1949ம் ஆண்டு பாபர் மசூதிக்குள் ராமர், லட்சுமணன் மற்றும் சீதா சிலைகள் வைக்கப்பட்டன. அப்போது ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து பாபர் மசூதி பூட்டப்பட்டது. இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் என யாரும் அதற்குள் அனுமதிக்கப்படவில்லை.

பிரதமராக பதவி ஏற்ற பிறகு ராஜீவ் காந்தி பாபர் மசூதி அருகே இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கினார். இந்த நிலையில் தான் 1992ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டது. பிறகு அந்த இடம் மத்திய மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்றது.

அங்குள்ள 2.77 ஏக்கர் நிலம் 24 மணி நேரமும் துணை ராணுவப்படையின் பாதுகாப்பிற்குள் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அங்கு சிறிய அளவில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டு தொடர்ந்து வழிபாடு நடைபெற்று வருகிறது.


அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நேற்று கூட சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்த அந்த கூடாரத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.