அமித் ஷாவிடம் கெத்து காட்டிய எடப்பாடி பழனிசாமி... 3 மணி நேர சந்திப்பில் என்ன நடந்தது தெரியுமா?

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. இதனையடுத்து பா.ஜ.க.வுக்கு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், எடப்பாடி பழனிசாமி கெத்து காட்டிய விஷயம் வெளியே வந்துள்ளது.


நேற்றைய தினம் கிண்டி ஹோட்டலில் தங்கியிருந்த அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்துப் பேசினார்கள். அந்த நேரத்தில், 50 தொகுதிகளை பா.ஜ.க. கேட்டுள்ளது.

அதாவது, எங்களுக்கு 30 தொகுதிகளும் எங்களுடன் கூட்டணி வைத்துள்ள தினகரனுக்கு 20 தொகுதிகளும் தரவேண்டும் என்று அமித்ஷா கோரிக்கை வைத்திருக்கிறார். உடனே எடப்பாடி பழனிசாமி, ‘பா.ஜ.க.வுக்கு எங்கள் கூட்டணியில் உரிய முக்கியத்துவம் தரப்படும். ஆனால், தினகரனுக்கு எங்களுடன் தொடர்பு இல்லை’ என்று உறுதியாக கூறியிருக்கிறார்.

தினகரன், சசிகலாவும் இணைந்தால் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று உளவுத் துறை ரிப்போர்ட் எடுத்து காட்டியிருக்கிறார் அமித் ஷா. உடனே அதற்கு பதிலடியாக, மாநில உளவுத் துறை ரிப்போர்ட் காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அந்த ரிப்போர்ட்டில் அ.தி.மு..க. நிச்சயம் 130 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாகக் கூறியிருக்கிறது.

அதையடுத்து பா.ஜ.க.வுகு 30 தொகுதிகள் தர முடியாது என்பதையும் எடப்பாடி உறுதிபட கூறியுள்ளார். எடப்பாடியின் உறுதியைக் கண்டு அமித்ஷா ஆச்சர்யப்பட்டு, விரைவில் இறுதி செய்துவிடுமாறு கூறிவிட்டு டெல்லி போயிருக்கிறார்.

ஆகவே, பா.ஜ.க.வுக்கு 21 சீட் கொடுக்கப்படும் என்று இப்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களில் அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிவுக்கு வரும் என்று தெரியவந்துள்ளது.