தி.மு.க.வுக்கு பல்பு கொடுத்த நடிகர் சத்யராஜ் மகள்..! என்ன செய்யப்போகிறார் தெரியுமா..?

நடிகர் சத்யராஜூன் மகளான திவ்யா, விரைவில் தி.மு.க.வில் சேரப்போகிறார். அவர் எம் எல் ஏ ஆகிறார். அமைச்சர் ஆகப் போறார். அவருக்காக சத்யராஜ், தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்யப்போகிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் எழுந்தன.


ஆனால், தி.மு.க.வுக்கு ஆப்பு வைப்பது போன்று இப்போது திவ்யா ஒர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, 'மகிழ்மதி' என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பிச்சிருக்கிறார் திவ்யா சத்யராஜ்.

இந்தியாவில் ஓர் ஆண்டின் கணக்கின்படி பத்து மில்லியன் திருமணங்கள் நடைப்பெறுகின்றன. அந்தத் திருமண விழாக்களில் பரிமாறப்படும் முப்பது விழுக்காடு உணவு வீணாகின்றன. உணவும் ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் இல்லை. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கொரோனா போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின் அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை. அதை நிவர்த்தி செய்வதே இவ்வியக்க லட்சியமாம்.

இயக்கம் அரசியல் கட்சியோ, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம். கொரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தரமான உணவு வழங்குகிறோம். கரோனா நேரத்தில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம் மேற்கொள்ளும்.

ஆனாலும் 'மகிழ்மதி இயக்கம்' என் கனவு. என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது, மகிழ்மதி என்ற பெயர் தோன்றியது. என் அம்மா பெயர் மகேஸ்வரி அவர் பெயரின் முதல் பாதியை என் இயக்கத்தின் பெயரில் இணைக்க வேண்டும் என்பது என் ஆசை என்று தெரிவித்துள்ளார்.

அச்சச்சோ வட போச்சே என்பதுதான் தி.மு.க.வின் நிலைமை.