கர்ப்பிணியின் மன அழுத்தத்தால் வரும் பாதிப்புகள் என்னென்னனு தெரியுமா?

மன நல பாதிப்புக்கு ஆளாகும் கர்ப்பிணி பெண், ஒரே மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் பல்வேறு மருத்துவரை மாற்றிக்கொண்டே இருக்கலாம். அதனால் அவரது மன நல பிரச்னையை மருத்துவர் அறியமுடியாமல் போகவும் வாய்ப்பு உண்டு. இதனால் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.


• கர்ப்ப காலத்தில் கர்ப்பிணியின் மனநலம் கண்டறியப்படாமல், சிகிச்சை எடுத்துக்கொள்ளாத பட்சத்தில், மிகவும் எடை குறைந்த பிள்ளை பிறப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

• அதேபோல் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னரே குழந்தை பிறப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு, ஆனால் எடை குறைந்த குழந்தையாக அல்லது உறுப்புகள் முழு வளர்ச்சி அடையாமல் இருக்கலாம்.

• மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகள் மந்தமாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. சிரித்தல், விளையாடுதல், பேசுதல் எல்லாமே தாமதமாகலாம்..

• மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தாய்ப்பால் கொடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை. அதனால் குழந்தைக்கு போதிய உணவும், சத்துக்களும் கிடைப்பதில் சிக்கலாகிறது. இந்த காரணத்தால் குழந்தைக்கு உயிர் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.

கர்ப்பம் அடைந்த பெண்ணிடம் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தால் அவரோ அல்லது அவரை சேர்ந்தவர்கள் உடனே மருத்துவரிடம் சொல்லி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவேண்டும். முன்கூட்டியே இதனை அறிந்துகொள்வது தாய்க்கும் குழந்தைக்கும் நல்லது. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிரசவம் நிகழும்போதும், குழந்தை பெற்றபிறகும் மனநல மருத்துவர் ஆலோசனை பெறவேண்டியது மிகவும் அவசியம்.