சிசேரியனுக்குப் பிறகு தாய்க்கு எப்படிப்பட்ட அவஸ்தை வரும் தெரியுமா?

பிரசவ வலிக்குப் பயந்து பலர் சிசேரியன் செய்துகொள்கிறார்கள். அவர்கள் சுகப்பிரசவ அனுபவத்தை இழப்பதுடன் சிசேரியனுக்குப் பிறகு நிச்சயம் வலியையும் துன்பத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.


பிரசவத்திற்கு பிறகான ஓரிரு வாரங்கள் நிச்சயம் வலி இருக்கவே செய்யும். இதற்காக வலி நிவாரணி எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கீறல்களில் தொற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு என்பதால் மிகவும் சுகாதாரத்தை பேண வேண்டும்.

சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பதில் சிரமம் இருக்கவே செய்யும். எந்தக் காரணம் கொண்டும் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்அதிக எடை கொண்ட ஏதேனும் பொருளை தூக்கவோ, நகர்த்திவைக்கவோ நேரிடுவதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்ட இடத்தில் பாதிப்பு ஏற்படலாம்.

இதுபோன்ற தொந்தரவுகள் இருக்கும் என்பதால் வலியை பொறுத்துக்கொண்டு சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்வதே நல்லது என்ற எண்ணம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்பட வேண்டும். இந்த பிரச்னைகளை சரிசெய்யும் வழிகளை பார்க்கலாம்.