2.63 லட்சம் கோடி! 17 லட்சம் பவுன்! உலகிலேயே அதிகம் பறிமுதல் செய்யப்பட்ட ரெய்டு! எங்கு தெரியுமா?

நமது நாட்டிலும் ஊழல் செய்தவர்கள் வீட்டில் அவ்வப்போது ரைடுகள் நடக்கின்றன.


கேத்தன் தேசாய் வீட்டிலும்,கர்நாடகா கிரனைட் ரெட்டிகள் வீட்டிலும் சி.பி.ஐ ரைடில் கிடைத்த சில நூறு கோடிகளுக்கே நாம் வாயைப் பிளக்கிறோம்.சீனாவில் ஜாங் கி என்கிற ஒரு ஊழல் அதிகாரி வீட்டில் நடந்த ரைடைப் பற்றி உலகமே வாயைப் பிளக்கிறது.

அவரிடமிருந்து இந்திய மதிப்பில் 2 லட்சத்து 63ம் கோடி கருப்புப் பணம் கைபற்றப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லை ஜெண்ட்டில் மென்,தங்கமும் கிடைத்திருக்கிறது.எவ்வளவு தெரியுமா 13.5 டன்.அதாவது,நம்ம ஊர் கணக்குப்படி 16 லட்சத்து 87ஆயிரத்து 500 பவுன்! இது தவிர பல ஆடம்பர பங்களாக்களும் லஞ்சமாக பெற்றிருக்கிறாராம்.

அதாவது நம்ம ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியின் சொத்தளவு பணத்தை லஞ்சமாக வாங்கிச் சேர்த்திருக்கிறார்.கிழக்குச் சீனாவில் இருக்கும் அன்ஹுயி என்கிற மாநிலத்தில் பிறந்தவர் ஜாங் கி.1983ல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.சான் யா நகரில் துணை மேயராகவும்,டான் சோவ் நகரின் மேயராகவும் பதவி வகித்திருக்கிறார்.

அதன் பிறகுதான் ஹைனான் மாநிலத்தின் நிர்வாகியாக ஆகி இருக்கிறார். மோடியின் புதிய நண்பரான ஜி ஜின்பிங் பதவிக்கு வந்த பிறகு கடந்த 7 ஆண்டுகளில் 53 உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிப் பிடிபட்டு இருக்கிறார்கள்.

இந்த ஆண்டில் மட்டும் ஊழல் புகாரில் சிக்கி இருக்கும் 17வது உயர் அதிகாரி ஜான் கி என்கின்றன சீன ஊடகங்கள்.என்ன பிரிமியர் ஜி ஜின்பிங் அவர்களே,மாமல்லபுரம் விசிட்டில் எங்கள் மோடியிடம் கருப்புப் பணத்தை ஒழிப்பது எப்படி என்று கேட்டு பாருங்கள்.நல்ல ஆலோசனைகள் சொல்லுவார் கேட்டுப் பிழைத்துக் கொள்ளுங்கள்.