தமிழன் கண்டுபிடித்த இட்லியின் மகிமை தெரியுமா ??

தமிழர்களின் கண்டுபிடிப்பாக கருதப்படும் இட்லியை சரிவிகித உணவு என்று மருத்துவம் பாராட்டுகிறது. ஏனென்றால் இட்லிக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, உளுந்து மற்றும் சாம்பார், சட்னிக்குப் பயன்படுத்தப்படும் பருப்பு, கொத்தமல்லி, தேங்காய் போன்ற அனைத்தும் சேர்ந்து மனிதனுக்கு ஆரோக்கிய பரிசாக அமைந்துள்ளது.


ஆரம்பத்தில் உருண்டை வடிவமாகவே இட்லி அவிக்கப்பட்டது. விருந்து, பண்டிகை நேரங்களில் மட்டுமே அவிக்கபட்ட இட்லி, இப்போது பெரும்பாலான தமிழர்களின் காலை மற்றும் இரவு உணவாக மாறிவிட்டது.

·         இட்லியில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை நிரம்பியிருப்பதால் எளிதில் ஜீரணமாக உதவி செய்கிறது.

·         பசியை மட்டுப்படுத்தி திருப்தியளிக்கும் லைசின் அமிலம் இட்லியில் இருப்பதால், பசி உடனே அகன்று எளிதில் மனத்திருப்தி கிடைக்கிறது.

·         இட்லியுடன் புதினா அல்லது கொத்தமல்லி சட்னி எடுத்துக்கொண்டால் நரம்புகள் சுறுசுறுப்படைந்து ரத்தசுழற்சி மேம்படும்.

·         சிறு குழந்தைகளுக்கு இட்லி கொடுக்கும்போது உடல் வளர்ச்சி ஏற்பட்டு எலும்புகள் வலுவடையும்.

நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்தப் பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாத உணவு இட்லி மட்டும்தான்.