பலாப்பழம் ரகசியம் என்னன்னு தெரியுமா? உஷார் முதியவர்களே !!

முக்கனிகளில் அதீத சுவையுடன் இருக்கும் பழம் என்றால் அது பலாப்பழம். பொதுவாக மலைப்பகுதிகளிலும் மணற்பாங்கான இடங்களிலும் வளரக்கூடியது.


பலாவில் பல்வேறு வகைகள் உள்ளன, இதனை சக்கை, பலாசம், வருக்கை என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கவும் செய்கிறார்கள். பலாவின் இலை, காய், கனி, பட்டை போன்ற அனைத்தும் மருத்துவகுணம் நிரம்பியது.

       ·   நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பலாப்பழம் சாப்பிடுவது செரிமானத்துக்கு மிகவும் நல்லது.

       ·   வைட்டமின் சத்துக்களுடன் கால்சியமும் நிரம்பியிருப்பதால் முதுமையைத் தடுக்கும் பணியை சிறப்புற செய்கிறது.

       ·   பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை குறைப்பதுடன் இதய நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

       ·    அல்சரை குணமாக்கும் தன்மையும் நரம்புக்கு புத்துணர்வு தரும் குணமும் பலாவுக்கு உண்டு.

நிரம்ப மருத்துவகுணம் உள்ளது என்றாலும் சளி, மூலம், வாதம் போன்ற பிரச்னை இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும்.