தூக்கிலிடப்பட்ட தீரன் சின்னமலையின் தியாகம் தெரியுமா?

திப்புசுல்த்தான் வீழ்த்தப்பட்டது 17ம் நூற்றாண்டின் இறுதி தினங்களில்...


திப்புசுல்த்தான் வீழ்த்தப்பட்டது 17ம் நூற்றாண்டின் இறுதி தினங்களில். திப்பு வீழ்ந்ததும் அவரது படைத்துணைவர்கள் தங்களது சிறு சிறு படைகளுடன் சொந்த ஊருக்குத் திரும்பி விட்டனர்.அப்படி தன் சொந்த ஊரான ஓடநிலைக்குத் திரும்பிய தீரன் சின்னமலை சிவன்மலைக்கு வடமேற்கில் இருந்த காடுகளை விலைகொடுத்து வாங்கி,திப்பு விட்டுச்சென்ற பணியைத் தொடர கொங்கு இளைஞர்களைத் திரட்டி அங்கே பயிற்சி அளித்தாதார்.அந்த சிறு படையை வைத்துக்கொண்டு பவானி மற்றும் ஈரோட்டில் இருந்த வெள்ளையர் படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் தொடுக்கத் துவங்கினார்.

அவற்றில் மூன்று களங்கள் முக்கியமானவை. அவை காவிரிக்கரை,( ஈரோடு அருகில்),ஓடாநிலை,அரச்சலூர் ஆகியவை. இந்த மூன்று களங்களிலுமே வெற்றி அவருக்குத்தான்.ஆனாலும்,காட்டில் மறைந்திருந்த தீரன் சின்னமலை உள்ளூர்க்காரன் ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிறைசெய்யப்பட்டார்.சின்னமலையுடன் அவர் மூத்த சகோதரர் இருவரும்,கருப்ப சேர்வை என்கிற தோழரும் கைது செய்யப்பட்டனர்.

1756 ஏப்ரல்17ம் தேதி ஈரோட்டை அடுத்த செ. மேலப்பாளையம் என்கிற கிராமத்தில் ரத்தினசாமி கவுண்டர்,பெரியாதா தம்பதிகளுக்கு குழந்தையாய் பிறந்த சின்னமலையின் இயற்பெயர் தீர்த்தகிரி.கைது செய்யப்பட்ட சின்னமலையும் மற்ற வீரர்களும் சங்ககிரி கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.அந்தச் செய்தி பரவி உள்ளூர் மக்கள் கொந்தளித்தனர்.அதனால் விசாரணை என்ற பெயரில் காலம் தாழ்த்தி சரியான சந்தர்ப்பத்துக்கு காத்திருந்தனர்.

அவர்கள் விரும்பியபடியே 1805 ஜூலை 31ம் தேதி அந்த சந்தர்ப்பம் வாய்த்தது.அன்று ஆடி 18 ம் நாள்.ஆடிப் பெருக்கு கொங்கு மண்டலத்தில் ,குறிப்பாக காவிரிக் கரையோர ஊர்களின் மிக முக்கியமான திருவிழா.மக்கள் அன்று காவிரியில் வரும் புது வெள்ளத்தை வரவேற்று விழா எடுத்துக்கொண்டு இருந்த நேரத்தில் ,தீரன் சின்னமலை,அவரது சகோதரர்கள்,கருப்ப சேர்வை ஆகியோரை சங்ககிரி கோட்டையில் வெள்ளையர்கள் தூக்கில் இட்ட நாள் இந்த ஜூலை 31.