மனித உடலில் 350 மூட்டு இருப்பது தெரியுமா? மூட்டு கவனிக்கும் வழிகள் ??

நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது. வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது. நம் உடலில் 350 க்கு மேற்பட்ட மூட்டுகள் உள்ளன.


பந்து கிண்ண மூட்டு - குழியான கிண்ணமும் அதன் உள்ளே சுழலும் வகையில் பந்து போல் எலும்பும் அமைந்திருக்கும். உதாரணம் - தோள்பட்டை.

கீல் மூட்டு - வீட்டின் கதவுகள் முன்னும், பின்னும் அசைவது போன்று ஒரு பக்கம் மட்டும் மடக்கி நீட்ட முடியும்.

உதாரணம் - முழங்கை

வழுக்கும், நழுவும் மூட்டுகள் - ஒன்றின் மேல் ஒன்று வழுக்கிச் செல்லும். உதாரணம் - மணிக்கட்டு, கணுக்கால் மூட்டுகள்.

'செக்கு' மூட்டுகள் - நாலா பக்கமும் அசையும் மூட்டுகள் - உதாரணம் - முதுகெலும்பு