பண்டிகை தினங்களில் கிடைக்கும் விளாம்பழம் மகிமை தெரியுமா ??

பண்டிகை நாட்களில் மட்டுமே விளாம்பழம் கிடைக்கிறது. இதனை எப்படி சாப்பிடுவது என்று தெரியாத காரணத்தாலே பலரும் இதனை விரும்புவது இல்லை.


·         இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் சத்து நிரம்பியுள்ளதால் பித்தம் சம்பந்தமான பிரச்னைகளை குறைப்பதுடன் வாந்தியை நிறுத்தும் தன்மையும் உண்டு.

·         ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை வெளியேற்றும் திறன் இந்தப் பழத்துக்கு உண்டு என்பதால் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

·         வாய் கசப்பு, அதிக வியர்வை, கிறுகிறுப்பு போன்ற பிரச்னை இருப்பவர்கள் விளாம்பழத்தில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் ஆறுதலாக இருக்கும்.