காந்தி முதன் முதலாகச் சென்னை வந்தது 1896ல்.அப்போதெல்லாம் காந்தி சூட்- கோட் அணிந்துதான் வந்திருக்கிறார். ஜார்ஜ்டவுன் பகுதியில் இருந்த , பிரிட்டிஷ்காரர்களால் நடத்தப்பட்ட பக்கிங்ஹாம் என்கிற ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறார்.
காஸ்மோபாலிட்டன் கிளப்பில் காந்தி அரையாடையுடன் நுழைந்தாரா? சென்னை பட்டினத்தை காந்தி பட்டினம் என்று மாற்றுவதற்கு நடந்த முயற்சி தெரியுமா?

அன்றைய சென்னையில் சாதாரண சைவச் சாப்பாடு 2 அணாதான்.ஆனால்,காந்தி ஒரு ஒன்னே கால் ரூபாய்க்கு சாப்பிட்டு இருக்கிறார். சென்னை பாரிஸ் பச்சையப்பன் பள்ளியில் நடந்த தனது முதல் கூட்டத்தில், தென்னாப்பிரிக்க இந்தியர்களின் துன்பங்களை பற்றி ஒன்றரை மணி நேரம் எழுதி எடுத்து வந்த உரையை வாசித்து போரடித்திருக்கிறா.
இது போல் மொத்தம் 13 முறை சென்னை வந்திருக்கிறார். 1916ல் தனது இரண்டாவது மெட்ராஸ் விசிட்டின் போதே கத்தியவார் சட்டை , பஞ்சகச்சம் என்று அவரது டிரஸ்கோடு மாறி இருந்தது.ஆனால்,மதுரை மக்களை பார்த்து விட்டு,சர்ச்சிலின் பாஷையில் ' அரை ஆடை பக்கிரியாக' மாறிய பிறகுதான் அவரது காஸ்மோபாலிட்டன் கிளப் விசிட் நடந்திருக்கிறது.
காஸ்மோபாலிட்டன் கிளப்புக்குள் நுழைய வேண்டும் என்றால் காலர் வைத்த சட்டை அணிந்திருக்க வேண்டும் என்பது முக்கியமான விதி.ஆனால் காந்தி தனது வழக்கமான ஆடையில்தான் வருவார் என்பதால் காந்திக்கு நடந்த வரவேற்பின் போது அன்றைய விழாவை புறக்கனித்திருக்கிறார்.
காந்தியின் காஸ்மோபாலிட்டன் வரவேற்பை எதிர்த்து கூட்டத்தில் கலந்து கொள்ளாத பிரபலம் யார் தெரியுமா?.ஜஸ்ட்டிஸ் கட்சியை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் , பிரபல வழக்கறிஞருமான பிட்டி தியாகராய செட்டிதான் அந்தப் பிரபலம்.அவர் பெயரைத்தான் சென்னை தியாகராய நகருக்கு சூட்டி இருக்கிறார்கள் என்பது உபரித்தகவல்.
1948 ஜனவரி 30ம் தேதி காந்தி கொல்லப்பட்ட தினத்தில் சென்னையில் பலநூறு பேர் மொட்டை போட்டுக் கொண்டு கடலில் தலை முழுகி,காந்திக்கு இறுதிச் சடங்கு செய்திருக்கிறார்கள்.
சென்னை மாநகராட்சி,ஒருபடி மேலே போய் மெட்ராஸ் என்கிற அப்போதைய பெயரை ' காந்தி பட்டிணம்' என்று மாற்றலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியதாம்.