கர்ப்பிணியின் மனநலத்தை கண்காணிப்பது எப்படி தெரியுமா?கணவர்களே கவனம்!!

வெளியே சந்தோஷமாக சிரித்துப்பேசும் பெண்கள் மனதுக்குள் மிகுந்த அச்சத்துடன் இருப்பதுண்டு. இப்படிப்பட்ட பெண்களிடம் பேசும்போது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதை எளிதில் கண்டறியமுடியாது. கர்ப்பிணி பெண்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவ ரீதியாக கண்டறியமுடியும்.


            • அதிக துன்பம், கவலையில் இருக்கும் கர்ப்பிணிகளின் கர்ப்பப்பைக்கு செல்லும் ரத்தவோட்டம் குறைவாக இருப்பதற்கு அதிக வாய்ப்புண்டு.

           • மனநல பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு தைராய்டு சுரப்பு மாறுபடலாம் என்பதால், இதனை பரிசோதனை மூலம் கண்டறியவேண்டும்.

          • நல்ல தூக்கம், போதுமான உணவு, ஓய்வு எடுக்க முடிகிறதா என்பதை பொறுத்தும் கர்ப்பிணியின் மனநிலையை அறிந்துகொள்ள முடியும்.

          • அதீத பயம் உள்ளவர்களுக்கு கர்ப்பத்தை பாதிக்காதவண்ணம் மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

         மருந்து, மாத்திரைகள் கொடுப்பதைவிட மனதை ரிலாக்ஸ் ஆக்கும் வழிமுறைகள், நன்றாக தூங்குவதற்கான வழிமுறை,   ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, அளவளாவுதல் போன்றவை மிகுந்த பயன் தருகின்றன. இவற்றை முறைப்படி கர்ப்பிணி   எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் ஏற்படும் பிரச்னைகளை நாளை பார்க்கலாம்.