சம்மணம் போட்டு சாப்பிடுவது என்ன ஆசனம் தெரியுமா? என்ன பலன் தெரியுமா?

வெளிநாட்டவர்கள் ஸ்பூனால் எடுத்து சாப்பிடுகிறார்கள். ஆனால் நம் தமிழர்கள் கைகளால் சாப்பிடுவதையும் தரையில் அமர்ந்து உண்பதையும் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கிறார்கள். கைகளால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?


கைகளால் சாப்பிடுவதன் மூலம் உணவு எவ்வளவு சூடாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். சூடான உணவை சாப்பிட்டு நாக்கை சுட்டுக் கொள்வதையும், அல்சர் நோயை வரவழைத்துக் கொள்வதையும் கட்டுப்படுத்தும் பழக்கம் இது.

 டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவதை விட, தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதே  உடலுக்கு நல்லது.  தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது, உடலை திரும்பத் திரும்ப சாய்த்து உணவை சாப்பிடுவோம்.  

அதனால் முதுகெலும்பு வலிவடைந்து, இரத்த ஓட்டமும்  செரிமானமும் தூண்டப்படுகின்றன. டைனிங் டேபிளில் சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் விரைவில் சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது. எனவேதான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்படி வலியுறுத்தபட்டது.