கர்ப்பகால நீரிழிவால் எப்படியெல்லாம் பாதிப்பு வரும் தெரியுமா ??

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, சரியான நேரங்களில் உணவு உட்கொள்வது, விலக்கவேண்டிய உணவுகளை தவிர்த்தல் போன்றவை கர்ப்பகால நீரிழிவு நோயாளிகளின் முதல்கட்ட நடவடிக்கை ஆகும். இதுதவிர மருத்துவர் ஆலோசனைக்கு ஏற்ப மருந்து எடுத்துக்கொள்வதுடன் உடற்பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.


·         மருத்துவர் ஆலோசனைக்கு ஏற்ப மருந்து, உணவு, வாழ்க்கை முறை மாற்றம் செய்யவில்லை என்றால் கர்ப்பகால நீரிழிவு காரணமாக தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

·         நீரிழிவை கட்டுப்படுத்தவில்லை என்றால் வயிற்றுக்குள் குழந்தையின் எடை அதிகரித்து பிக் பேபி சின்ட்ரோம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

·         அளவுக்கு அதிகமாக பனிக்குட நீர் உருவாகும் காரணத்தால் குறைபிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

·         தாய்க்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படவும், குழந்தைக்கு எதிர்காலத்தில் நீரிழிவு நோய் உண்டாகவும் செய்யலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவில்லை என்றால் இயற்கை பிரசவம் நடப்பதற்கு வாய்ப்பின்றி, சிசேரியன் செய்யவேண்டிய அவசியம் ஏற்படும். மேலும் பிரசவத்திற்கு பிறகு தாய்க்கும் பிற்காலத்தில் குழந்தைக்கும் நிரந்தரமாக நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் உடல் பருமன் உண்டாகவும் செய்யலாம்.