தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா திடீர் பேச்சு… என்ன விஷயம் தெரியுமா?

தமிழ்நாடு முதமைச்சர் .எடப்பாடி மு.பழனிசாமி அவர்களை இன்று மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.


அதாவது, புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், புரெவி புயல் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவரித்தார். 

அப்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்தார்.