தி.மு.க.வை தேர்ந்தெடுக்கவே செய்யாதீங்க... பா.ஜ..க.வின் 100 காரணங்கள்.

தி.மு.க.வை ஏன் தேர்வு செய்யக்கூடாது என்று 100 காரணங்களை அடுக்கி ஒரு புத்தகமே வெளியிட்டுள்ளது பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி அந்த புத்தகத்தை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். அதிலிருந்து ஒருசில விஷயங்கள் மட்டும் இங்கே.


தி.மு.க., ஆட்சியில், வாரிசுகள் அடித்த கொள்ளை, தமிழகத்தையே திவாலாக்கி விட்டது. குடும்ப வியாபாரம், போட்டியாக வந்தவர்களை அதிகாரம் கொண்டு நசுக்குவது போன்ற அவலங்கள் அரங்கேறின.

தி.மு.க., ஆட்சியில், சென்னை கொலை நகராக மாறியது. தமிழகத்தில் கூலிப்படைகளின் அட்டூழியம் தலைதூக்கியது. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திகழ்ந்தது. 2006 - 11 தி.மு.க., ஆட்சியில், கொலைகள், 38 சதவீதமும்; வழிப்பறி, செயின் பறிப்பு, வாகன திருட்டு, 127 சதவீதமும்; வீடு புகுந்து திருடுவது, 120 சதவீதமும் அதிகரித்தது. தி.மு.க.,வினரின் நிலஅபகரிப்பு கொடிகட்டி பறந்தது.

கடந்த, 2018ல், 'தென் மாநிலங்கள், திராவிட நாடு வர சம்மதம் தெரிவித்தால், அவர்களுடன் சேர்ந்து, நாங்களும் களத்தில் இறங்குவோம்' என்று, ஸ்டாலின் பிரிவினையை துாண்டினார்.இந்தியா, சீனா எல்லை பிரச்னையின் போது, வி.சி., தலைவர் திருமாவளவன், 'டுவிட்டர்' பக்கத்தில், இந்திய ராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பதிவிட்டார். சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீடு சட்டத்திற்கு ஆதரவு அளித்தது, தி.மு.க.,

ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களை காயப்படுத்தும் வகையிலும், உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விதமாகவும், பல வார்த்தைகளை, ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க., தலைவர்கள் பயன்படுத்தி உள்ளனர். ஹிந்து மத கடவுள்களை இழிவுப்படுத்தும் விதமாக, வீடியோ வெளியிடும், 'கருப்பர் கூட்டம்' பின்னணியில் இருந்து இயங்கியது, தி.மு.க., நிர்வாகிகள்.மாற்று மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும், ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர், ஹிந்து மத பண்டிகைகளுக்கு மட்டும், ஒருநாளும் வாழ்த்து தெரிவித்தது இல்லை.

காங்கிரஸ் - தி.மு.க., மத்தியில் ஆட்சி செய்தபோது, வெளிநாடுகளில் இருந்து, முறை தவறிய பணப் பரிமாற்றம் செய்தது சம்பந்தமான, ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மீது நிலுவையில் உள்ளது. சிதம்பரம், அந்த வழக்கில் ஜாமினில் உள்ளார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அரசில் நடந்த, 1 லட்சம் கோடி ரூபாய் நிலக்கரி ஊழல்.

பயிற்று மொழி தமிழாக இருந்த நிலையை மாற்றி, தமிழை படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையை, கல்வியில் ஏற்படுத்தியதற்கு, இவர்களே முக்கிய காரணம்.ஹிந்தி, தமிழை அழித்து விடும் என சொல்லி கொண்டு, ஸ்டாலின் உட்பட, தி.மு.க.,வின் முக்கிய தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில், ஹிந்தி பயிற்றுவிக்கின்றனர் என்று வரிசையாக அடுக்கியுள்ளனர்.

இனியாவது மக்களுக்கு இந்த உண்மைகள் புரியவேண்டும்.