நடந்து முடிந்த சட்டமன்ற இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.
இடைத்தேர்தலில் திமுக சறுக்கல் ! தப்பிய எடப்பாடி ஆட்சி !
இதில் திமுக 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் 12 இடங்களில் திமுகவும், மற்ற 9 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகித்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் லோக் சபா மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
இடை தேர்தல் வெற்றி நிலவரம்:
ஆம்பூர் தொகுதியில் வில்வாநாதன் 95,504 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
குடியாத்தம் தொகுதியில் காத்தவராயன் 92,729 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜி 28,644 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
இன்னும் மற்ற 21 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் அதரற்கான முடிவுகள் வெளியீடப்படும்.