திமுக+தப்லீக் ஜமாத்தின் ஓட்டு வங்கி அரசியல்..! வெளியானது ரகசியம்..! கசிந்தது முன்னாள் அமைச்சரின் செல்போன் ஆடியோ!

திமுக முன்னாள் அமைச்சர் பேசும் ஆடியோ கசிந்து உள்ளதால், தப்லீக் ஜமாத்தை வைத்து ஓட்டு வங்கி அரசியல் செய்யும் ரகசியம் வெளியாகி உள்ளது.


கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கு பெற்றிருந்தனர். அந்த மாநாட்டில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பங்கு பெற்றிருந்தனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றானது அங்கிருந்து ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு பரவிய அதிர்ச்சித் தகவல் ஆனது ஒரு சில வாரங்களுக்கு முன்பு தெரியவந்தது. 

இதனால் அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு சமூக பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நிகழ்வை மையமாக வைத்து அரசியல் செய்யும் விதமாக திமுக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அவர்கள் பேசும் ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. 

அதன்படி திமுக முன்னாள் அமைச்சர், டெல்லி மாநாட்டில் பங்கு பெற்றவர்களின் விவரங்களையும் யாருக்கெல்லாம் நோய் பெற்று வந்திருக்கிறது என்பதை கண்டறிய வந்த அரசு அதிகாரிகளை மற்றும் காவல்துறையினரை வேலை செய்யவிடாமல் அவர் தடுத்து உள்ளதாகவும் அந்த ஆடியோ மூலம் தெரியவந்துள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துதல் தொடர்பான அரசு பணிகளை செய்ய முற்படும்போது, இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கியை மனதில் வைத்துக்கொண்டு அரசு எச்சரிக்கை பணிகளை செய்ய விடாமல் முடக்கி இஸ்லாமியர்களுக்கு நல்லது செய்வது போன்ற மாய பிம்பத்தை உருவாக்கியுள்ளார்.

 அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் ஓட்டுகள் அனைத்தும் எங்களது கட்சியின் ஓட்டு அவ்வாறு கூறி அரசு பணிகளை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த ஆடியோ மூலம் திமுக முன்னாள் அமைச்சர் தப்லீக் ஜமாத்தை வைத்து ஓட்டு வங்கி அரசியல் செய்ய முயற்சிப்பது தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.