நீ ஒரு துரோகி! அமைச்சர் மாபா. பாண்டியராஜனை விரட்டியடித்த பிரேமலதா! அப்செட் சுதீஷ்!

அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் பிரேமலதா.


விஜயகாந்த் இல்லாமல் தனியே பிரசாரம் செய்வதே அ.தி.மு.க.வினரிடம் புகைச்சலைக் கிளப்பியுள்ளது

இந்த நிலையில் தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்கு அமைச்சர் மாபா. பாண்டியராஜன் முன்வந்தார். எந்தத் தொகுதிக்குப் போகலாம் என்று கேட்ட தகவல் அறிந்ததும் பிரேமலதா கொந்தளித்துவிட்டாராம்.

எங்கள் கட்சியின் முதல் துரோகி மாபா.பாண்டியராஜன். அவர் எங்களுக்கு எந்தக் காலத்திலும் எதற்காகவும் பிரசாரம் செய்யக்கூடாது என்று கட்டளை போட்டுவிட்டாராம். இந்தத் தகவல் அறிந்து எடப்பாடி தரப்பில் சுதீஷை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்கள்.

நம் இரண்டு கட்சிக்குள்ளும் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், எல்லோரும் இணைந்து பணியாற்றினால்தான் தொண்டர்களும் ஒற்றுமையாக இருப்பார்கள். இப்போது தே.மு.தி.க.வில் இருந்து அ.தி.முக.வுக்கு வந்தவர்களை விரோதியாக, துரோகியாகப் பார்ப்பது நல்லதில்லை என்று சொல்லப்பட்டதாம்.

அவரும் பிரேமலதாவிடம் இதனை கூறியிருக்கிறார். அப்போதும் பிரேமலதா கோபம் அடங்கவே இல்லையாம். எந்தக் காரணம்கொண்டும் தே.மு.தி.க.வில் இருந்து வெளியே போன யாரும் எங்கள் தொகுதிக்குள் கால் வைக்கக்கூடாது என்று கறாராக சொல்லியிருக்கிறார். அதனால் சுதீஷும் அப்செட் ஆகிவிட்டாராம். தகவல் அறிந்து மாபா. பாண்டியராஜன் ரொம்பவே கவலையில் இருக்கிறாராம்.