பேச முடியாது! சைகை மூலம் கேப்டன் சொன்ன சேதி! கலங்கிய செய்தியாளர்கள்!

நெகிழ்ச்சி செய்த கேப்டன்


செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர்களைப் பார்த்து சிரித்தபடி தன்னால் பேச முடியாது என்று தனது தொண்டையைக் காட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் சைகை காட்டியபோது செய்தியாளர்கள் கலங்கி போனார்கள்.

அதிமுக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். செய்தியாளர் கூட்டத்திற்கு விஜயகாந்த்தை கைத்தாங்கலாக அழைகத்து வந்த அமர வைத்தனர். இதனை பார்த்த செய்தியாளர்கள் கம்பீரமாக நடை போடும் கேப்டனுக்கா இந்த நிலை என உருகினர்!

அப்போது செய்தியாளர்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் சரமாரியாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். அதை தனக்கே உரிய வெள்ளந்தி பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.

அப்போது திடீரென செய்தியாளர்களைப் பார்த்து சிரித்தபடி தனது தொண்டையை சுட்டிக் காட்டி பேச முடியாது என்று அவர் சைகை காட்டிக் கூறினார். இதைப் பார்த்து செய்தியாளர்கள் கலங்கி போனார்கள். எத்தனை கேள்விகள் கேட்டாலும் சளைக்காமல் அதிரடியாக பதில் சொல்லும் அல்லது தனது தரப்பை அதிரடியாக நியாயப்படுத்த கடுமையாக வாதாடும் அந்த பழைய கேப்டனை நினைத்துப் பார்த்து நிருபர்கள் சிலர் கண் கலங்கினர்.