தலைசுற்றல் பிரச்சனையா… தணிக்குமே அவரைக்காய் !!

இன்று அவரைக்காயின் மருத்துவப்பெருமை தெரியாமல் பலரும் இதனை புறக்கணித்து வருகிறார்கள். உடல் நலம் காக்க எத்தனையோ காய்கனிகள் இருக்கும்போது, மனநலம் காக்கும் காயாக அறியப்படுகிறது அவரைக்காய்.


அவரைக்காயில் பிஞ்சு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இது உடலுக்கு வலு கொடுப்பதுடன் மனதுக்கு அமைதி கொடுக்கிறது. மேலும் சிந்தனையை கூர்மைபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவுகிறது.

அவரை பிஞ்சை வாரம் இரண்டு முறை உணவில் எடுத்துக்கொண்டால் கண் நரம்புகளுக்கு மிகவும் நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தலைசுற்றலை குறைக்கும் தன்மை அவரைக்கு உண்டு. மேலும் சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கவும் அவரை உதவுகிறது.