திருமணம் ஆகி 5 ஆண்டுகள்! குழந்தை இல்லை! கணவனை பிரிந்த நடிகை!

பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையான தியா மிஸ்ரா தன்னுடைய கணவரை பிரியப்போவதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.


தமிழ் திரையுலகில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த என் சுவாச காற்றே என்ற திரைப்படத்தில் டான்ஸராக அறிமுகமானவர் நடிகை தியா மிஸ்ரா. இதற்குப் பின் இவர் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இதனையடுத்து இந்தி சினிமாவில் நுழைந்த தியா மிர்ஸா தனக்கென ஒரு சிறப்பான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி சினிமாவில்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் டீசன்டான நடிகை என்று பெயர் பெற்றவர். 

இவர் பொதுவாகவே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். இப்படிப்பட்ட குணம் கொண்ட இவர் சமீபத்தில் ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் .

நானும் என் கணவரும் எங்கள் வாழ்க்கையை பற்றி பேசி இந்த விவாகரத்து முடிவை எடுத்துள்ளோம். இந்த முடிவை நாங்கள் இருவருமே ஏற்றுக் கொண்டுள்ளோம் . திருமண வாழ்க்கையில் இருந்து நாங்கள் பிரிந்து விட்டாலும் நல்ல நண்பர்களாக இருப்போம். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவ்வாறாக நடிகை திவ்யா மிஸ்ரா இந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவை பார்த்து இவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். தியா மிர்சா தனது கணவர் சாஹிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் இவர்களுடைய விவாகரத்து குறித்த செய்தி வெளியாகி திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது .

இதனைப் பார்த்த இவருடைய ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். மற்றும் சிலர் 6 வருடங்களாக காதலித்து 5 வருடங்களுக்கு முன்னர் இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. ஆனால் தற்போது வரை குழந்தை இல்லை. இந்த காரணத்தினால் தான் இவர்கள் பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கிறார்கள்.