நாடு முழுவதும் களை கட்டத் துவங்கிய தீபாவளிக்கான விற்பனை !!

இன்னும் ஒரு சில நாட்களில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.


இந்துக் கடவுளான கிருஷ்ணபரமாத்மா ஆணவத்தில் சுற்றி திரிந்த நரகாசுரனை தந்திரத்தால் கொன்ற நாளையே தீபாவளியாக நாம் அனைவரும் கொண்டாடி வருகிறோம் . புத்தாடை ,பட்டாசுகள் , இனிப்புகள் ஆகியவை தான் தீபாவளி பண்டிகையின் அடையாளம் என்று கூறவேண்டும். ஆகையால் இந்த புத்தாடை பட்டாசு இனிப்பு ஆகியவற்றின் விற்பனைகள் சந்தையில் களைகட்ட துவங்கியுள்ளன. 

தீபாவளி அன்று காலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்தானம் செய்வது சிறந்தது. இதற்குப் பின்பு புத்தாடைகளை அணிந்து இனிப்புகளை மற்றவர்களுடன் பரிமாறிக் கொண்டும் பட்டாசுகளை வெடித்தும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு வரப்போகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள பெருநகரங்களில் தீபாவளி விற்பனை களை கட்ட தொடங்கியுள்ளது. அதிலும் முக்கியமாக சென்னை தி நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து உடைகளையும் பொருட்களையும் வாங்கிய வண்ணம் உள்ளனர். மக்கள் கூட்டம் அலைமோதியது அடுத்து அங்கு கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதேபோல் சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை, போன்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்கள் ஆகியவை மிகவும் கூட்டணியுடன் காணப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். புதுச்சேரியில் உள்ள முக்கிய கடைவீதிகள் ஆன காந்தி வீதி, மிஷன் வீதி , நேரு வீதி போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆகவே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.