தீபாவளி பிரியாணி திருவிழா..! பேமிலி பேக்..! பிரன்ட்ஸ் பேக்..! வாய் பிளக்க வைக்கும் விலையில்! தேனி விருந்து!

தேனியில் பிரபல பிரியாணி கடையில் தீபாவளிக்காக ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு அதிரசம், முறுக்கு, தேங்காய் பர்பி, குலாப் ஜாமுன் போன்ற இனிப்பு வகைகளை அதிகம் தயாரிக்கப்படும். கிராமப்புறங்களில் மக்கள் 15 நாட்களுக்கு முன்னதாகவே மாவையே அரைத்து மேற்கூறப்பட்ட பலகாரங்களை தயாரிப்பதற்காக ஏற்பாடுகளை செய்வர்.

காலம் மாற மாற இனிப்பு மற்றும் கார பலகாரங்களை மக்கள் தற்போது பலகார கடைகளிலிருந்து வாங்கி உண்ண தொடங்கியுள்ளனர். காலத்தின் கட்டாயத்தினால் இத்தகைய மாற்றத்திற்கு ஏற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் வித்தியாசமாக தேனி மாவட்டத்தில் உள்ள பிரபல பிரியாணி கடையில் தீபாவளி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி பேக், ஃபிரண்ட்ஸ் பேக், ஸ்மால் பேக் என்று வித்தியாசமான வகைகளில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதாவது ஃபேமிலி பேக் ஆஃபரில், ஒரு கிலோ சிக்கன் அல்லது மட்டன் பிரியாணி, மீன் போன்லெஸ் 3 பிளேட், சிக்கன் சுக்கா ஒரு கிலோ, தயிர் பச்சடி, தால்சா ஆகியன 1,900 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இந்த உணவானது கிட்டத்தட்ட 10 பேருக்கு போதுமானது.

இதேபோன்று ஸ்மால் பேக்கில், அரை கிலோ சிக்கன் அல்லது மட்டன் பிரியாணி மற்றும் ஒரு பிளேட் மீன் போன்லெஸ் ஆகியன 899 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வான்கோழி பிரியாணியும் ஒரு கிலோ 1,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

மேலும் சிக்கன் சுக்கா, மட்டன் பிரியாணி தனியாக வாங்கிக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் வாங்குவதற்கு உணவுகளை டப்பாக்களில் வைத்து வழங்குவதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பானது  அப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கும் அதிர்ச்சியாகவும் ஆனந்தமாகவும் அமைந்துள்ளது.