புது விதமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடும் பீகார் மாநிலம் !!

தீபாவளி பண்டிகை என்றாலே நாம் அனைவருக்கும் உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்குவது வழக்கம்.


தீபாவளி பண்டிகை அன்று நாம் அனைவரும் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்துவிட்டு பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை பகிர்ந்து கொண்டு கோலாகலமாக கொண்டாடி வருகிறோம்.

நாம் தீபாவளியை கொண்டாடுவது போல் மற்ற மாநிலத்தில் வாழும் மக்களும் பல விதங்களில் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் பீகாரை சேர்ந்த மக்கள் நாம் யாருமே அறிந்திராத வகையில் ஒரு புதுவிதமான தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். 

பிகார் மாநிலத்தில் தீபாவளி கொண்டாடுவதற்கு முன்பாக , மரத்தினுடைய கொம்பில் மிகப்பெரிய துணியை பயன்படுத்தி சுற்றுவர். பின்னர் அதில் தீயை மூட்டிவிடுவார்கள் , அது பார்ப்பதற்கு பந்தம் போல் காட்சியளிக்கும். இதனை வீட்டின் வாசலில் நின்று கொண்டு வேகமாக தூக்கி எறிவார்கள் .

இதன்மூலம் வீட்டிலிருக்கும் மூதேவியை வீட்டைவிட்டு துரத்தி விட்டு விட்டு மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைப்பதற்காக செய்யும் செயலாகும். இவரது நெருப்பு பந்தத்தை பயன்படுத்தி பீகார் மாநில மக்கள் தீபாவளி பண்டிகையை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.