சொத்து தகராறில் தம்பதியினர் நள்ளிரவில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அக்காள் மகன் வீட்டுக்குள் நள்ளிரவு புகுந்து சித்தி போட்ட வெறியாட்டம்..! நெஞ்சை உலுக்கி எடுக்கும் சம்பவம்! கரூர் பரபரப்பு!

கரூர் மாவட்டத்தில் மணவாடி அய்யம்பாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ரங்கநாதன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 35. அதே பகுதியில் விவசாய தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் தீபிகா. தீபிகாவின் வயது 33. இத்தம்பதியினருக்கு அக்ஷயா என்ற 4 வயது மகள் உள்ளார்.
ரங்கநாதனின் சித்தியின் பெயர் ராணி. ராணிக்கு பார்த்திபன், பிரவீன், கௌதம் என மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களுக்கும் ரங்கநாதனுக்கு னம் சொந்தமாக தாந்தோன்றிமலை மில்கேட் பகுதியிலுள்ள நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரித்துக் கொள்வது இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ராணி தன்னுடைய மகன்களுடன் ரங்கநாதனின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். "செய்து தரலைனா கொன்னுடுவேன்" என்று ரங்கநாதனை மிரட்டியுள்ளார். இவர்களுடைய மிரட்டல்களை கண்டு ரங்கநாதன் அஞ்சாததால் ஆத்திரமடைந்த 4 ரங்கநாதன் மற்றும் தீபிகாவை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அக்ஷயா வையும் கொலை செய்வதற்காக அவளை தேடினர்.
அதற்குள் தீபிகா மற்றும் ரங்கநாதனின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு முன் கூடியதால், அக்ஷயாவை தேடாமல் 4 பேரும் தப்பியோடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் ரங்கநாதன் மற்றும் தீபிகா உயிரிழந்து கிடந்தனர். அக்ஷயா தனியறையில் உறங்கி கொண்டிருந்ததால் உயிர் தப்பியுள்ளார்.
உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராணி, பார்த்திபன், பிரவீன், கௌதம் ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தன்னுடைய தாய் மற்றும் தந்தையின் சடலங்களை கட்டி அணைத்தபடி அக்ஷயா கதறி அழுத சம்பவமானது அக்கம்பக்கத்தினர் மனம் உருக செய்தது. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.