சுடச்சுட டெட்டால், லைசால், விம்..! சென்னையில் போலியாக தயாரித்து கல்லாக் கட்டிய குஜராத்தீஸ்..! கெத்தாக செய்து கொத்தாக சிக்கிய பின்னணி!

போலியாக டெட்டால், லைசால், மற்றும் விம் ஜெல் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக கிடைத்துள்ள தகவல்கள் சென்னை வாசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளன.


கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதிலிருந்தே கிருமிநாசினிகளாக பயன்படுத்தப்படும் டெட்டால், லைசால் ஆகிய பொருட்களுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டது. பற்றாக்குறையை நீக்குவதற்கு எவ்வளவோ முயற்சித்தும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களால் இயலவில்லை.

இதனால் ஊரடங்கு தொடங்கிய சில நாட்களிலேயே இது போன்ற பொருட்களுக்கு அனைத்து கடைகளிலும் தட்டுப்பாடு ஏற்பட்டன. இந்தப் பற்றாக்குறையை சரிசெய்ய இயலாமல் சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கிடையே சென்னையின் முக்கிய பகுதிகளான ராயபுரம், மயிலாப்பூர் ,ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் எந்தவித கட்டுப்பாடும் ஏற்பட்டதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது டீலர்களுக்கு அழைப்புகள் வரவில்லை.

டீலர்கள் 2 முறை சென்று நேரடியாக பார்த்த போதும் பொருட்கள் குவிந்து கிடந்தன. இந்த செய்தியானது தயாரிப்பு நிறுவனங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனடியாக நேரடியாக கடைகளுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் விற்கப்பட்டு வந்த லைசால், டெட்டால், விம் ஜெல் போன்றவை போலியாக தயாரிக்கப்படுவது தெரியவந்தது.

அந்த பொருட்களை விற்ற ஒரு டீலர் என்னை வாங்கிக்கொண்டு சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பெரும்பாக்கத்தில் இத்தகைய கிருமிநாசினி பொருட்களை போலியாக தயாரிப்பதற்காக ஒரு தொழிற்சாலை இயங்கி வருவது தெரிந்துள்ளது. அது தொழிற்சாலையை குஜராத்தை சேர்ந்த ரமேஷ் பட்டேல் என்பவர் இயக்கிவருகிறார்‌.

அந்த தொழிற்சாலையை சோதனை செய்தபோது 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், பேக்கேஜிங் பொருட்களும் கிடைத்துள்ளன. இந்த போலியான கிருமி நாசினிகளை ஒரிஜினல் போலவே கனகச்சிதமாக பேக்கிங் செய்து வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான ரமேஷ் பட்டேல் தலைமறைவாகியுள்ளதால் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

இதுபோன்ற குற்ற சம்பவங்களில் சிக்கிக்கொள்ளும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் என்றும், மீண்டும் எந்தவித தொழிலையும் தொடங்க இயலாது என்றும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் வியாபாரிகளும் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக பொருட்கள் கிடைத்தால் போதும் என்ற நோக்கில் இருந்ததால் உண்மையா போலியா என்பதை அவர்களால் கண்டறிய இயலவில்லை என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.