வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்கள்! மீட்கச் சென்ற வீரர்களுக்கு நேர்ந்த பரிதாபம்! தீரத்துடன் சிலர் செய்த சாகசம்!

கேரள மாநிலத்தில் மீட்பு குழுவினர் மரத்தில் சிக்கி கொண்ட சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியது.


கேரள மாநிலத்தில் சென்ற வாரத்திலிருந்தே வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. 70-க்கும் மேற்பட்டோர் மழையிலும், நிலச்சரிவிலும் சிக்கி உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே, மீட்பு படையினரே வெள்ளத்தில் அடித்து சென்ற சம்பவமானது அனைவரையும் பதற வைத்துள்ளது. மழையினால் கடும் வெள்ளம் ஏற்பட்டு சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்பு குழுவினர் மீட்டெடுத்து வந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக வீரர்களின் படகு மரத்தின் மீது சிக்கி கொண்டது. 

அனைத்து வீரர்களும் உதவிக்கு காத்திருந்தனர். அப்போது மற்ற வீரர்கள்தங்கள் உயிரை பணையம் வைத்து வெள்ளத்தில் சிக்கி கொண்ட வீரர்களை காப்பாற்றினர். இந்த சம்பவமானது  திறமையாக வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.