சேரனை உடனே வெளியே அனுப்ப வேண்டும்! இல்லை என்றால் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவோம்! எச்சரிக்கும் இளம் டைரக்டர்!

பிக் பாஸ் வீட்டில் நடிகர் சேரன் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவதால் , அவர் மீது பாசம் கொண்ட ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் ஒருங்கிணைந்து சேரனை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே கொண்டு வருவோம் என்று சங்ககிரி ராஜ்குமார் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார் .


பிக்பாஸ் வீட்டில் தொடக்கம் முதலே மீராவுக்கும் இயக்குனர் சேரனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது .  மேலும் கடந்த வாரம் இயக்குனர் சேரன் மீது நடிகை மீரா அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகளை வைத்தார் . ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மக்களின் எண்ணத்திற்கு ஏற்ப ,நடிகர் கமலஹாசன் நடிகை மீராவிற்கு குறும்படத்தை போட்டு காட்டி இயக்குனர் சேரன் பக்கம் உள்ள நியாயத்தை நிரூபித்துக் காட்டினார் . இதனால் கடந்த வாரம் மீரா மக்களிடையே 

 குறைவான வாக்குகளைப் பெற்று பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சரவணனும் தேவையில்லாமல் இயக்குனர் சேரனிடம் கோபப்பட்டு அவரை ஒருமையில் பேசினார் . இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

இவ்வாறு சேரன் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்டு வருவதால் கடுப்படைந்த வெங்காயம் பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் ,பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருவதைக் கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரம் துடித்து வருகிறார்கள் என அவர் கூறியுள்ளார் . 

சொல்ல மறந்த கதை படத்தில் சேரன் அவர் மாமனாரால் ஒரு காட்சியில் அனுமதிக்கப்படுவார் . படம் என்று கூட பாராமல் மக்கள்  சேரனுக்காக  மிகவும் பரிதாபப் பட்டார்கள். இதுவே அவரின் பெயருக்கு கிடைத்த  மிகப்பெரிய வெற்றி .

மேலும் எனது இயக்கத்தில் வெளிவந்த வெங்காயம் திரைப்படம் சரியான முறையில் மக்களைச் சென்றடையாத போது ,இயக்குனர் சேரன் அவர்கள் நல்ல படம் மக்களிடையே சென்றடைய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களிடமும் நடிகர்களிடமும் , இயக்குனர்களிடமும் கௌரவம் பார்க்காமல் என் திரைப்படத்தை அவர்களுடைய கொண்டு செல்ல இயக்குனர் சேரன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்தார்  என்பதை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன் எனவும் வெங்காய பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்  கூறியுள்ளார் .

இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்டு வருவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது . நடிகர் விஜய் சேதுபதியின் அறிவுறுத்தலின் படிதான் இயக்குனர் சேரன் பிக் பாஸ்  நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். எனவே இயக்குனர் சேரனுக்கு இதுபோன்ற அவமதிப்புகள் இனிமேல் ஏற்படாதவண்ணம் நடிகர் விஜய் சேதுபதி ,இயக்குனர் சேரனை  பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் . அப்படி இல்லாவிட்டால் இயக்குனர் சேரனால் பயனடைந்த என்னைப்போல் பல ரசிகர்களும் நண்பர்களும் இணைந்து அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே கொண்டுவருவோம் என மிரட்டல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்.