காத்திருக்கச் சொன்னார் ! 1 வருடம் காத்திருந்தேன்! கடைசியில் கைவிட்டுவிட்டார்! நயன்தாரா குறித்து மனம் திறந்த நந்தா பெரியசாமி!

இயக்குனர் நந்தா பெரியசாமி ஒரு கல்லூரியின் கதை , மாத்தியோசி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.


இவர் இயக்கிய இந்த இரண்டு திரைப்படங்களும் சரியாக போகாததால், இவருக்கு திரைத்துறையில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னாள் இயக்குனர் நந்தா பெரியசாமி , கேமராமேன் ராம்ஜி மூலம் நடிகை நயன்தாராவுக்கு 12 நிமிடங்கள் அடங்கிய ஒரு டெமோ குறும்படத்தை அனுப்பியுள்ளார்.

அந்த குறும்படத்தை பார்த்துவிட்டு நயன்தாரா எக்ஸலண்ட் பிரில்லியன்ட் என்று ரிப்ளை மெயில் அனுப்பியதாகவும் இயக்குனர் நந்தா பெரியசாமி கூறியிருந்தார் . ஒரு சந்திப்பின்போது இந்த திரைப் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று நயன்தாரா உறுதி அளித்ததாகவும் , ஆனால் அதற்குப் பிறகு ஒரு வருடம் காக்க வைக்கப்பட்டு இதுவரை நயன்தாராவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் இயக்குனர் நந்தா பெரியசாமி கூறியுள்ளார் .

ஆனால் இதே கதையை நடிகை டாப்சிக்கு கூறியபோது, கதையின் ஆழத்தை நன்றாக புரிந்துகொண்டு தமிழ் தெலுங்கு இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நடிக்க முன்வந்துள்ளார் என்று நடிகை டாப்ஸியை இயக்குனர் நந்தா பெரியசாமி புகழ்ந்துள்ளார்.

ராஷ்மி ராக்கெட் என்ற பெயரில் இந்த திரைப்படம் நடிகை டாப்ஸி நடிப்பில் இந்தியில் துவங்கியுள்ளது. விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் மெடல் என்ற தலைப்பில் தொடங்கப்படவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.