சிவகார்த்திகேயனுடனான 2 ஆண்டுகள்..! முதல் முறையாக மனம் திறந்த லட்சுமி ராமகிருஷ்ணன்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இரண்டாண்டுகள் தன்னுடன் பயணித்த சிவகார்த்திகேயன் தன்னை தெரியாததுபோல் பேசியதால் தனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மனம் திறந்துள்ளார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது பெரியதிரையில் முன்னணி கதாநாயகர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் நடிகர் நடிகைகள் தங்களுடைய படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பிரபலங்கள் அனைவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் மூலம் ரசிகர்களுடன் இணைப்பில் இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் குறள் 786 திரைப்படத்தின் டிரைலரை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மூலம் இணையத்தில் வெளியிட்டார். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் லட்சுமி ராமகிருஷ்ணன் அபிநயா ஆகியோர் நடித்திருந்தனர். இதனை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியிருந்தார்.

அதில் ஒருசிலர் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்களுடைய பதில்களையும் கூறிவருகின்றனர். இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக வலைதளத்தின் மூலம் தன்னுடைய ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்த வண்ணம் இருந்தார். நெட்டிசன் ஒருவர் அவரிடம் ,. மேடம் "குறள் 786" என்ற குறும் படத்தை எப்போது வெளியிடுவீர்கள் என கேள்வி எழுப்பினார்.

நெட்டிசன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், இது ஒரு குறும்படம் அல்ல. சிவகார்த்திகேயனுடன் என்னுடைய முதல் படமாக இருந்திருக்க வேண்டியது. சொல்லப்போனால் நான்தான் அவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது. சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நான் அதைக் கைவிட்ட பிறகு தான் அவர் 'மெரினா' திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார் என்று இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த நிதிச் எனக்கு பதில் அளித்திருந்தார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் இந்த பதிலானது ட்வீட்டரில் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டது. பல முன்னணி இணைய தளத்தில் இந்த செய்தியானது பரவ ஆரம்பித்தது. இதனை அடுத்து இன்றைய தினம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன், " நடிகர் சிவகார்த்திகேயன் உடனான வேறுபாடு எப்போது மறந்துவிட்டது, அவர் இப்போது வெற்றிகரமாக இருப்பதற்கு முழுக்க முழுக்க அவருடைய திறமை தான் காரணம். எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 இருப்பினும் என்னை தெரியாதது போல் சிவகார்த்திகேயன் பேசியது தான் எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது என கூறியவர், குறள் 786 திரைப்படத்தின் போது என்னுடன் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக பயணித்தார். அதுமட்டுமில்லாமல் அவர் என்னுடைய குடும்பத்தில் ஒருவராகவே இருந்து வந்தார் எனவும் அவர் கூறியிருக்கிறார். இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.