எல்லாவற்றுக்கும் காரணம் விஜய் சேதுபதி தான்! பிக்பாஸ் சேரன் உடைத்த சீக்ரெட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மக்கள் மனதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் இயக்குனர் சேரனும் ஒருவராவார். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த இயக்குனர் சேரன் , கமலா தியேட்டரில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கேற்பட்ட அனுபவங்களை பற்றியும் , அங்கு நிலவும் சூழ்நிலைகளை பற்றியும் பத்திரிகையாளர்களிடம் கூறினார் . 

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் விஜய் சேதுபதிதான் உங்களை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போய்வாருங்கள் என்று கூறினாரா ?என்று கேள்வி எழுப்பினார் ? அதற்கு பதிலளித்த சேரன் , ஆம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு என்னைத் தேடி வரும் நிலையில் நானும் விஜய்சேதுபதி இருவரும் படமொன்றில் கமிட் ஆகி இருந்தோம். அதாவது விஜய் சேதுபதி வைத்து நான் ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதற்காக அனைத்தும் தயார் நிலையில் இருந்தது. அந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி யில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனை அறிந்த நடிகர் விஜய் சேதுபதி என்னை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் எல்லாத் தரப்பினர் மத்தியிலும் பெரும் புகழ் அடையலாம் , அதுமட்டுமில்லாமல் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இது மிகப் பெரிய அனுபவமாக இருக்கக்கூடும். அந்த அனுபவத்தை நீங்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நிலையில் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று என்னிடம் கூறினார். அவருடைய இந்த அறிவுறுத்தலின்படி தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன் . அவர் கூறியபடியே இன்று எனக்கான ஒரு மிகப்பெரிய அந்தஸ்தும் இந்த சமூகத்தில் கிடைத்துள்ளது என்பதை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சேரன் கூறியிருந்தார்.