அவமானப்படுத்திய விக்ரம்! கை கொடுத்த சூர்யா! நெகிழ்ந்து போன பாலா! பிளாக்பஸ்டர் கன்பார்ம்!

நடிகர் சூர்யா இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இயக்குனர் பாலாவின் வெற்றி படங்களின் வரிசையில் சேது , நந்தா, பிதாமகன் என பல திரைப்படங்களை உள்ளடக்கலாம். இருப்பினும் இயக்குனர் பாலா கடைசியாக இயக்கிய திரைப்படத்தில் சற்று சரிவை சந்தித்தார். அதாவது தெலுங்கு திரை உலகில் வெற்றிப்படமாக உருவெடுத்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்துவந்தார். இந்தத் திரைப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்திருந்தார். 

வர்மா திரைப்படமானது 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர் அந்த திரைப்படத்தை பார்த்து இது அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தோடு ஒத்துப்போகவில்லை . ஆகவே இந்த திரைப்படத்தை நாங்கள் இத்தோடு முடித்துக் கொள்கிறோம் என்று கூறினார் . மேலும் இந்தத் திரைப்படத்தை வேறு ஒரு இயக்குனரை பயன்படுத்தி துருவ் விக்ரம் கதாநாயகனாக வைத்து ஆதித்யா வர்மா என்ற பெயரில் எடுக்கப்போவதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவம் பாலாவின் இத்தனை கால கடின உழைப்பிற்கு மிகப்பெரிய பின்னடைவை அளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. தற்போது இயக்குனர் பாலா தன்னுடைய இந்த பின்னடைவை சரியாகும் விதத்தில் அடுத்த படத்திற்கு தயாராகி உள்ளார்.

இதனை அடுத்து ஒரு புதிய மாறுபட்ட கதையை இயக்குனர் பாலா நடிகர் சூர்யாவிடம் கூற அதை கேட்டு மிகவும் அசந்துபோன நடிகர் சூர்யா உடனே அந்த படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார். இதற்கு முன் நடிகர் சூர்யா , பாலாவின் இயக்கத்தில் நந்தா, பிதாமகன் என இரண்டு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது மூன்றாவதாக பாலாவுடன் புதிய திரைப்படத்தில் இணைய உள்ளார் . தற்போது நடிகர் சூர்யா சூரரைப்போற்று திரைப் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் . இந்த திரைப்படம் முடிந்தவுடன் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் . இதற்கு பின்பு அவர் பாலாவுடன் இணைவார் என்று கூறப்படுகிறது . இருப்பினும் இந்த கூட்டணியை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. 

தமிழ் திரையுலகில் முன்னுக்கு வர முயற்சித்து தோல்வி மேல் தோல்வி அடைந்து வந்த விக்ரம், பாலாவின் சேது திரைப்படம் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். ஆனால் மகன் திரைப்பட விவகாரத்தில் பாலாவிற்கு நேர்ந்த அவமானத்தை விக்ரமால் சரி செய்ய முடியவில்லை. ஆனால் நந்தா மூலம் சினிமாவில் திருப்புமுனையை பெற்ற சூர்யா தற்போது பாலாவிற்கு கை கொடுத்து நெகிழ வைத்துள்ளார்.