ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது! பாக்யராஜின் பாலியல் பேச்சு! மேடையில் நெளிந்த பெண்கள்!

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இயக்குனரான கே.பாக்யராஜ் "கருத்துக்களை பதிவு செய்" திரைப்படவிழாவில் பங்கேற்று பேசினார்.


அப்போது பேசிய அவர், பாலியல் பிரச்சனைகளுக்கு பெண்கள் தான் காரணம் என்றும் பெண்கள் செல்போனில் பேசுவதே இம்மாதிரியான தவறுகளுக்கு வழிவகுக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.

பெண்கள் செல்போன் பயன்படுத்தாத காலத்தில் மிகவும் கட்டுப்பாட்டோடு இருந்ததாகவும் அது பயன்பாட்டிற்கு வந்த பின்பு அவர்கள் கட்டுப்பாட்டை இழந்து தவறான பாதையில் செல்வதாகவும் அவர் கூறினார். 

பாலியல் பிரச்சினைகள் அனைத்துக்குமே பெண்கள் தான் மூல காரணம் என்றும் சின்னவீடு வைத்திருக்கும் ஆண்கள் கூட தங்களுடைய பெரிய வீட்டை ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொள்வான் என்றும் அவர் கூறினார் .

ஆனால் ஒரு பெண்ணோ தன் கள்ளக் காதலனுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று எண்ணி தன்னுடைய கணவரையும் குழந்தைகளையும் கொல்ல துணிகிறாள் என்று பல்வேறு செய்திகளை செய்தித்தாள்களில் நாம் படித்து வருகிறோம் என்றும் கே. பாக்கியராஜ் அந்த மேடையில் பேசினார்.

மேலும் பேசிய அவர் " ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது" என்பதற்கு இணங்க பெண்கள் இடம் கொடுப்பதால் தான் ஆண்கள் தவறு செய்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினார். பொள்ளாச்சி சம்பவத்திற்கு காரணமும் பெண்கள் இடம் கொடுத்ததால்தான் நிகழ்ந்தது என்றும் கூறியிருந்தார்.

ஆண்கள் செய்வது தவறு என்றால் அந்த தவறு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருவது பெண்கள்தான் என்று கூறினார் பாக்யராஜ். பாக்யராஜின் இந்த பேச்சை கேட்ட அங்கிருந்த பெண்கள் முகம் சுளித்து உடல் நெளிந்து காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.