தமிழ் சினிமா உலகில் இயக்குனர் பாலா பல்வேறு வித்தியாசமான படங்களை எடுத்துள்ளார். இயக்குனர் பாலாவின் திரைப்படம் மற்ற இயக்குனர்களின் திரைப்படத்தை காட்டிலும் முற்றிலும் வித்தியாசமாக அமைந்து இருக்கும்.
அவன் வந்தா நான் எழுந்திரிக்கனுமா? அரங்கிற்குள் நுழைந்த தளபதி விஜயை நேரில் பார்த்ததும் இயக்குனர் பாலா செய்த செயல்! அதிர்ச்சி வீடியோ உள்ளே!

இயக்குனர் பாலா பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், நந்தா தாரை தப்பட்டை என பல்வேறு வித்தியாசமான திரைப் படங்களை இவர் இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் இயக்குநர் பாலா அவர்கள் நடிகர் விஜய்யை அசிங்கப்படுத்தி உள்ளதாக சமூக வலைதளத்தின் செய்திகள் பரவி வருகின்றன.
சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் இயக்குனர் பாலா உட்பட பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் அவர்கள் வரும்பொழுது கை தட்டியும், கைகொடுத்தும், கரகோஷம் மற்றும் ஆரவாரம் செய்தனர்.
மேலும் நடிகர் விஜய் வருகையை பார்த்து நடிகர் கமலஹாசன் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் எழுந்து நின்று அவருக்கு கைகொடுத்து அவரை வரவேற்றனர். ஆனால் அங்கே இருந்த இயக்குனர் பாலா மட்டும் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். இயக்குனர் பாலாவின் இத்தகைய செயல் நடிகர் விஜய்யை அவமதிக்கும் விதமாக உள்ளது என கூறி சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.