கொல்கத்தா வீரர்களை கோபத்தில் திட்டி தீர்த்த தினேஷ் கார்த்திக்! செம வைரல் சம்பவம்!

கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் சக அணி வீரர்களிடம் கோபமாக பேசியது வைரலாக பரவி வருகிறது.


கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங் செய்யும் போது தினேஷ் கார்த்திக் அந்த அணியின் வீரர்கள் சுனில் நரேன் மற்றும் உத்தப்பாவிடம் கடுமையாக கோவத்தை வெளிப்படுத்தியதாக தெரிந்தது.

இதை பற்றி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், பந்து வீச்சாளர்களும், பீல்டர்களும் நடந்து கொண்ட முறை சரியானதாக இல்லை. ஆகவே அணியின் வெற்றிக்காக அவர்களிடம் கோவமாக நடந்து கொண்டேன். மேலும் நான் இது போன்று நடந்து கொள்வது மிகவும் அரிதான ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிங்ஸ் XI  பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிலே  ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெரும் என்பதால் சற்று பொறுமை இழந்து தினேஷ் கார்த்திக் கோவமாக நடந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.