மூத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மனைவி திடீர் மரணம்..!

தமிழக அமைச்சரவையின் மூத்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசனின் மனைவி கண்ணாத்தாள் காலமானார்.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருப்பர் திண்டுக்கல் சீனிவாசன். இவரது மனைவி கண்ணாத்தாள். இவர் திண்டுக்கல் நாகர்நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கண்ணாத்தாள் இன்று காலமானார்.

காலமான கண்ணாத்தாள் வயது 67. மனைவி மரணச் செய்தியை கேட்டதும் சென்னையில் அமைச்சரவை கூட்டத்தில் இருந்த திண்டுக்கல் சீனிவாசன் பாதியில் அதில் இருந்து புறப்பட்டார். அவருக்கு சக அமைச்சர்கள் ஆறுதல் கூறினர். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு 3 மனைவிகள் என்று கூறப்படுகிறது.

தற்போது திண்டுக்கல் சீனிவாசன் தனது 3வது மனைவியுடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் திரும்பியதும் அவரது மனைவி கண்ணாத்தாள் இறுதிச்சடங்குகள் நடைபெறும்.