காஞ்சி வீரன்ஸ் அணியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய அஸ்வின் அணி ! புள்ளிப் பட்டியலில் திண்டுக்கல் தொடர்ந்து முதலிடம்!

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை அபாரமாக வென்று உள்ளது.


முதலில் விளையாடிய காஞ்சி வீரன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது .அந்த அணியில் விஷால் வைத்தியா  அதிகபட்சமாக 51 ரன்களை எடுத்தார்.திண்டுக்கல் அணியின் மோகன் அபிநவ்  சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார் .

பின்னர் களமிறங்கிய திண்டுக்கல்  அணியினர் 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது .திண்டுக்கல் அணியின் ஹரி நிஷாந்த் சிறப்பாக விளையாடி 61 ரன்களை எடுத்து அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார் .

இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணியினர் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர் .